மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலி..!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்றைய தினம் (ஜூலை 23) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியை குறைப்பதாக அறிவித்திருந்தார்.
குறிப்பாக, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதம் குறைப்பதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து, நேற்றே தங்கம் விலை சென்னையில் சவரனுக்கு ரூபாய் 2 ஆயிரத்து 100 வரை சரிந்தது. இந்நிலையில், பட்ஜெட் தாக்கத்தின் எதிரொலியாக தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 480 குறைந்துள்ளது.
சென்னையில் கிராம் தங்கம் ரூபாய் 6 ஆயிரத்து 490 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 51 ஆயிரத்து 920-க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளி கிராமுக்கு ரூபாய் 92-க்கு விற்கப்பட்டு வருகிறது.
Read More : திருமணமான மூன்றே நிமிடத்தில் விவகாரத்து..!! மணப்பெண்ணை அதிரவைத்த மாப்பிள்ளை..!! நடந்தது என்ன..?