Flash: நீட் தேர்வு முறைகேடு... மேலும் 2 பேரை கைது செய்தது சிபிஐ...!
நீட் தேர்வு முறைகேட்டில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 2 பேரை கைது செய்தது சிபிஐ. இதுவரை நீட் முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சிபிஐ கைது நடவடிக்கை.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடுமுழுவதும் கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு நடப்பதற்கு ஒரு நாள் முன்னதாக பிஹார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்ததை அந்த மாநில போலீஸார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து தேசிய தேர்வு முகமைக்கு (என்டிஏ) பிஹார் போலீஸார்தகவல் தெரிவித்தனர். போலீஸாரின் தீவிர விசாரணையில், வினாத்தாள் தலா ரூ.40 லட்சத்துக்கு விற்பனைசெய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இளநிலை நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பிகாரில் 17 மாணவர்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல குஜராத் கோத்ரா மையத்தில் தேர்வு எழுதிய 30 பேரும் தகுதி நீக்கம் செய்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. இளநிலை நீட் தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டதாக ஏற்கனவே 63 மாணவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது மேலும் 47 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக இடைத்தரகர்கள், மாணவர்கள் உட்பட ஏற்கனவே 19 பேர் கைது செய்யப்பட்டனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மேலும் 2 பேரை கைது செய்தது சிபிஐ. இதுவரை நீட் முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சிபிஐ கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.