இரவு உணவிற்கு பின்னர் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் உடையவர்களாக நீங்கள்.? உங்களுக்குத்தான் இந்த செய்தி.?!
இரவு உணவிற்கு பின்பாக பழங்கள் சாப்பிடுவது பலருக்கும் பழக்கமாக இருந்து வருகிறது. அது உடலுக்கு ஏற்றதல்ல என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக வாழைப்பழம் இரவு உணவிற்கு பின்பு எடுத்துக் கொள்ளக் கூடாது.
இரவு உணவிற்கு பின்பாக எந்த ஒரு உடற்பயிற்சியும் நாம் செய்ய மாட்டோம் அப்படியிருக்க வாழைப்பழத்தை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை சத்து நம் உடலில் தங்கிவிடும். இதனால் உடல் எடையும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
பொதுவாக மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் இரவு உணவிற்கு பின்பு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அதற்கு பதிலாக நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளையும், பழங்களையும் எடுத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள், வயதானவர்கள் வாழைப்பழத்தை இரவில் எடுத்துக் கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். அடிக்கடி வாழைப்பழம் கொடுப்பதால் குழந்தைகளுக்கு சளி பிடிக்கும் என்பதால் இரவு நேரங்களில் வாழைப்பழம் கொடுப்பதை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.