For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சாதி மறுப்பு திருமணம்..!! காதலனை தாக்கிவிட்டு மாணவியை தூக்கிச் சென்ற நாம் தமிழர் நிர்வாகி..!! கோர்ட் பரபரப்பு உத்தரவு..!!

Naam Tamil Party executive Arunagiri has claimed that he assaulted them, castigated them and assaulted both of them and abducted the woman.
08:31 AM Sep 19, 2024 IST | Chella
சாதி மறுப்பு திருமணம்     காதலனை தாக்கிவிட்டு மாணவியை தூக்கிச் சென்ற நாம் தமிழர் நிர்வாகி     கோர்ட் பரபரப்பு உத்தரவு
Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (20). இவர், திருச்சி தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவியை காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் கடந்த 14ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

Advertisement

பெண்ணின் உறவினர்கள், அவர்களை தேடி வந்த நிலையில், அவர்கள் மதுரையில் தங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர், அதே ஊரை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரும், பெண்ணின் உறவினருமான வழக்கறிஞர் அருணகிரி ஒரு கும்பலுடன் மதுரைக்கு விரைந்தார். அங்கு சென்ற அவர், காதலன் சந்தோஷை காரில் கடத்தி கொடூரமாக தாக்கியுள்ளார். பின்னர், சந்தோஷை வழியிலேயே இறக்கி விட்டு அந்தக் கும்பல் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த சந்தோஷ், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து வளநாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து சந்தோஷிடம் வாக்குமூலம் பெற்றனர். அப்போது, நாம் தமிழர் கட்சி நிர்வாகி அருணகிரி தங்களை தாக்கி, சாதி ரீதியாக திட்டியதுடன் இருவரையும் தாக்கிவிட்டு பெண்ணை கடத்திச் சென்றதாக கூறியுள்ளார். இதையடுத்து, அருணகிரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், அவருடன் சென்ற கார்த்தி, பிரவீன் உள்ளிட்ட மேலும் 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அருணகிரி, பிரவீன், கார்த்தி, சாமிக்கண்ணு உள்ளிட்ட 3 பேரையும் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நாம் தமிழர் நிர்வாகி உள்ளிட்ட 4 பேரையும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அவர்கள் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அருணகிரி, கடந்த 2016 சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ’என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு பிக்பாஸுக்கு போனது தான்’..!! ’குடிப்பழக்கத்தால் இப்படி இருக்கேன்’..!! நடிகர் சக்தி வேதனை..!!

Tags :
Advertisement