முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

SETC  பேருந்தில் முன்பதிவு செய்து பயணித்தவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!! - 13 பேருக்கு ரொக்கப்பரிசு

Cash prizes will be given to 13 people who have been selected by lottery among those who have booked long-distance buses.
08:25 AM Jul 02, 2024 IST | Mari Thangam
Advertisement

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வார விடுமுறைகள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர இதர நாட்களில் இணையத்தில் முன்பதிவு செய்பவர்களை குலுக்கல் முறையில் தேர்தெடுத்து பரிசு வழங்கும் நிகழ்வு இன்று நடைப்பெற்றது.

Advertisement

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொலைதூர பேருந்துகளில், பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கும் பொருட்டு இணையதளம் மற்றும் செயலி உள்ளிட்டவை மூலம் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக,  TNSTC என்னும் செயலி உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் வலைதளமான https://www.tnstc.in மூலம் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.

வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிா்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், இதர நாட்களில் முன்பதிவு செய்யும் மூன்று பயணிகளை கணினி குலுக்கல் முறையில் தோ்ந்தெடுத்து அவா்களுக்கு தலா ரூ.10,000 வழங்கும் திட்டம் ஜனவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த திட்டம் வழியாக அதிகப்படியான பயணிகள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஜுன் மாதத்தில் இதர நாட்களில் முன்பதிவு செய்த பயணிகளில் 13 பயணிகளை கணினி மூலம் குலுக்கல் செய்து அவற்றில் முதல் மூன்று பயணிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், இதர 10 பயணிகளுக்கு தலா 2ஆயிரம் ரூபாய் வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குலுக்கல் முறையில் N.பிரவீன், F.முபாஷீர், B.செல்வகுமார் ஆகியோர் முதல் மூன்று நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு பெறவுள்ளனர். மேலும் M.பிரவீன், வேல்முருகன், நவீன் குமார், S.பிரதீப், V.வெல்ஜின் நிஜோ, S.பிரசன்னா, M.ஜெய்நுல், P.முருகன், ரேவதி,P.கண்ணன் ஆகிய பத்து பேர் தேர்தெடுக்கப்பட்டு சிறப்பு பரிசாக அவர்களுக்கு தலா ரூபாய் 2ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. மாநகா் போக்குவரத்துக்கழகம்(சென்னை) மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் கணினி குலுக்கல் முறையில் அவா்களை நேற்று (ஜூலை -1ம் தேதி ) தோ்ந்தெடுத்தாா். 

Tags :
Cash prizesonline ticket bookingsetc
Advertisement
Next Article