முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BREAKING: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 தொடர்பான வழக்கு.! பரபரப்பு தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம்.!

11:45 AM Dec 11, 2023 IST | 1newsnationuser4
Advertisement

2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 வது சட்டப்பிரிவு மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் அதன் சிறப்பு அந்தஸ்தை இழந்தது இந்த மாற்றங்கள் அப்போதைய குடியரசுத் தலைவரால் கொண்டுவரப்பட்டது.

Advertisement

இந்திய அரசியலமைப்பில் 370 வது சட்டப்பிரிவு என்பது காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் ஒன்றாகும். அந்த சட்டப்பிரிவின்படி இந்திய அரசியிலமைப்பின் எல்லா சட்டங்களும் ஜம்மு காஷ்மீருக்கு பொருந்தாது என்பதாகும். இந்த சிறப்பு அந்தஸ்தை குடியரசு தலைவர் 2019 ஆம் ஆண்டு நீக்கினார்.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 370 வது பிரிவு தொடர்பாக மூன்று நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கி இருக்கின்றனர் எனினும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரகுட் "அரசியலமைப்பின் 370 வது பிரிவு என்பது தற்காலிகமானது தான் நிரந்தரமானது அல்ல. குடியரசுத் தலைவரின் ஆட்சி அமலில் இருக்கும் ஒரு மாநிலத்தில் மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவிற்கு எதிராக வழக்கு தொடர முடியாது என தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் வர இருக்கும் நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Article 370caseSensational verdictsupreme court
Advertisement
Next Article