விவிபேட் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணக்கோரிய வழக்கு..!! உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!!
விவிபேட் இயந்திரங்களில் வரும் ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்ற பொதுநல வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குச்சீட்டு முறையுடன் ஒப்பிடுகையில், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் குற்றசாட்டுக்கள் எழுகின்றன. எனினும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் 100% பாதுகாப்பானது, முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என்று தேர்தல் ஆணையம் உறுதியாக கூறி வருகிறது. வாக்குப்பதிவின்போது, வாக்காளர் அளித்த ஓட்டு, உரிய சின்னத்தில் பதிவாகி இருக்கிறதா? என்பதை அறிய ஒப்புகை சீட்டுகள் வெளிவருகின்றன. ஆனால், வாக்கு எண்ணிக்கையின்போது ஒப்புகை சீட்டுகள் முழுமையாக எண்ணப்படாமல், ஏதேனும் சில இயந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன.
இதற்கிடையே, ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் சரிபார்க்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் 3 அமைப்புகள் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்குகள், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. உச்சநீதிமன்றமும் அப்போது பல முக்கிய கருத்துகளை தெரிவித்தது.
இறுதியில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தனர். இதற்கிடையே விவிபேட் இயந்திரங்களில் வரும் ஒப்புகை சீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பிக்க உள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், உச்சநீதிமன்றம் இன்று அளிக்க இருக்கும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலுக்கனா வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுவது குறிப்பிடத்தக்கது.
Read More : ராகுல் காந்தி நேருவின் பேரன் தானா..? திடீரென கிளம்பிய சந்தேகம்..!! டிஎன்ஏ பரிசோதனை பண்ணுங்க..!!