முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சற்றுமுன்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவின் கீழ் பாய்ந்த வழக்கு...!

05:20 PM Apr 22, 2024 IST | Vignesh
Advertisement

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில், சமூக வலைதளத்தில் போலியான தகவலை பரப்பிய புகாரில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு:

கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோமதி என்பவர், வாக்குப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, திமுகவினர் இந்தப் பாதகச் செயலை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை. அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையைக் கூட, தங்கள் விருப்பப்படிதான் நடத்த வேண்டும் என்ற திமுகவின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

வழக்கு பதிவு

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் கோமதி என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில், சமூக வலைதளத்தில் போலியான தகவலை பரப்பிய புகாரில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்முறையை தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்கு. ஏற்கனவே, இதே பொய்ச் செய்தியை பரப்பிய சின்ஹா, ஹரி பிரபாகர், சண்முகம், ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Next Article