முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Car | வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை..!! சொந்த கார் + வாடகை வாகனங்கள்..!! மீறினால் நடவடிக்கை..!!

07:16 AM Mar 21, 2024 IST | 1newsnationuser6
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில், போக்குவரத்துத்துறை ஆணையர் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டு இது தொடர்பான வழிகாட்டுதல்கள் அனைத்து அரசு துறை ஊழியர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டின் போக்குவரத்துத்துறை ஆணையர் சண்முகசுந்தரம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, சொந்த பயன்பாட்டு கார்களை வாடகை வாகனமாக பயன்படுத்தக் கூடாது என்றும், தேர்தல் நேரத்தில் சிலர் இவ்வாறு பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகார்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது.

Read More : அதிகாலையில் அதிர்ச்சி..!! 32 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை..!! படகுகளையும் பறிமுதல் செய்து அட்டூழியம்..!!

Advertisement
Next Article