For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புற்று நோய்க்கு வந்தாச்சு தீர்வு: இந்தியாவின் கண்டுபிடிப்பில் 'CAR-T' சிகிச்சை அறிமுகம்..!! இதன் சிறப்பம்சங்கள்.!

03:20 AM Feb 09, 2024 IST | 1newsnationuser4
புற்று நோய்க்கு வந்தாச்சு தீர்வு  இந்தியாவின் கண்டுபிடிப்பில்  car t  சிகிச்சை அறிமுகம்     இதன் சிறப்பம்சங்கள்
Advertisement

இந்தியாவின் CAR-T செல் சிகிச்சையை பயன்படுத்தி, ஒரு நோயாளிக்கு புற்றுநோய் குணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை, நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மரபணு ரீதியாக சரி செய்து, அவர்களை புற்றுநோயிலிருந்து முற்றிலுமாக விடுபட உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சமீபத்தில் மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) அங்கீகரித்த இந்தியாவின் புற்றுநோய் சிகிச்சையான CAR-T செல் சிகிச்சை பயன்படுத்திய முதல் நபர் புற்றுநோயிலிருந்து விடுபட்டுள்ளார். இந்த சிகிச்சை புற்றுநோயை குணப்படுத்த, நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை, மரபணு ரீதியாக சரி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த இரைப்பை குடலியல் நிபுணர், டாக்டர் (கர்னல்) வி.கே. குப்தா, இந்த சிகிச்சையை பயன்படுத்தியுள்ளார். வெளிநாடுகளில் இந்த சிகிச்சைக்கு ரூ.4 கோடி வரை செலவாகும். ஆனால் அவர் இதனை இந்தியாவில் வெறும் ரூ.42 லட்சம் செலுத்தி பெற்றிருக்கிறார்.

இந்த சிகிச்சை நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. T செல்கள் என்பது ஒரு வகை வெள்ளை ரத்த அணுக்கள் ஆகும். அவை உடலில் ஏற்படும் தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவுகின்றன. புற்றுநோய் உள்ளவர்களின் T செல்களில் உள்ள சிமெரிக் ஆன்டிஜென் ஏற்பி (CAR) எனப்படும் சிறப்பு புரதம் வெளிப்படுவதற்காக, அந்த T செல்கள் ஆய்வகத்தில் மாற்றியமைக்கப்படுகின்றன. இந்த மாற்றியமைக்கப்பட்ட T செல்களை உடம்பில் செலுத்தும் போது, அது கேன்சர் செல்களை கண்டறிந்து அவற்றை எதிர்த்துப் போராடுகிறது.

அக்டோபர் 2023இல் இந்த சிகிச்சை வணிக பயன்பாட்டிற்கு வருவதற்கு இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளரான மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) ஒப்புதல் அளித்துள்ளது. வணிக பயன்பாட்டில் உள்ள இந்த சிகிச்சைக்கு NexCAR19 என்று பெயரிடப்பட்டது. இந்திய தொழில்நுட்ப நிறுவனம் பாம்பே (IITB) மற்றும் டாடா மெமோரியல் மருத்துவமனை ஆகியவற்றின் உதவியுடன் இந்த சிகிச்சை ImmunoACT நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

10க்கும் மேற்பட்ட நகரங்களில், 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை இப்போது செய்யப்படுகிறது. இந்த சிகிச்சை ரத்தப் புற்றுநோய் மற்றும் நிணநீர்க்குழாய் புற்றுநோய் ஆகியவற்றை குணப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்களை உடைய 15 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

Tags :
Advertisement