நிலவில் கார் பந்தயம்!… எப்படி இருக்கும்?… AI புகைப்படம் வைரல்!
Moon: நிலவில் கார் பந்தயம் நடந்தால் எப்படி இருக்கும் என்று AI உருவாக்கிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
விண்வெளியில் பூமிக்கு மிக அருகில் இருப்பது நிலவு மட்டும் தான். அதனால் தான் நிலவு குறித்த ஆராய்ச்சியில் உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. 1958 முதல் இன்று வரை கிட்டத்தட்ட 140 முறை நிலவுக்கு உலக நாடுகள் விண்கலத்தை அனுப்பியுள்ளன. அதில் வெகு சில திட்டங்கள் தான் மனிதர்களை உள்ளடக்கியவை. பெரும்பாலானவை ஆர்பிட்டர்கள், லேண்டர்கள் மற்றும் ரோவர்களைக் கொண்டவை தான். தற்போது வரை நிலவில் விண்கலங்களின் புகைப்படங்கள் மட்டுமே நம்மால் பார்க்கமுடியும்.
ஆனால் AI தயாரித்த புகைப்படத்தில், நிலவில் கார் பந்தயம் நடந்தால் எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஸ்போர்ட்ஸ் கார்கள் மூலம் பந்தயம் நடப்பது குறித்து ஏஐ உருவாக்கிய புகைப்படத்தில் நாம் காணலாம். இந்த படங்கள் அனைத்திலும் வெவ்வேறு வண்ண கார்கள் காணப்படுகின்றன. பூமியில் கார் பந்தயம் எப்படி நடக்கிறதோ அதே மாதிரி கார் பந்தயமும் ஏஐ உருவாக்கிய புகைப்படத்தில் காணப்படுகிறது.
இப்போது சாத்தியமில்லை என்றாலும், அறிவியலால் எதிர்காலத்தில் எதுவும் சாத்தியமாகும். தற்போது, AI படத்தைப் பார்த்தாலே, நிலவில் கார் ஓட்டும் காட்சி எப்படி இருக்கும் என்பது தெளிவாகிறது.