For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அபாய கட்டத்தை எட்டிய தலைநகர் டெல்லி!… காற்றுமாசு 2வாரங்களில் மேலும் அதிகரிக்கும்!… நிபுணர்கள் எச்சரிக்கை!

07:18 AM Nov 04, 2023 IST | 1newsnationuser3
அபாய கட்டத்தை எட்டிய தலைநகர் டெல்லி … காற்றுமாசு 2வாரங்களில் மேலும் அதிகரிக்கும் … நிபுணர்கள் எச்சரிக்கை
Advertisement

டெல்லியில் தீவிரமடைந்துவரும் காற்றுமாசுபாடு, அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

தலைநகர் டெல்லி, மிக மோசமாக மாசடைந்த நகரங்களில் ஒன்று. அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசுபாட்டால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக குளிர்காலத்தில் டெல்லியின் காற்று மாசு தீவிரமடைகிறது. விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பது, காற்றின் குறைந்த வேகம், விழாக்களின் போது வெடிக்கப்படும் பட்டாசு என இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

அந்தவகையில், இந்த ஆண்டின் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளது. அதாவது, பல்வேறு இடங்களில் காற்றின் தரக் குறியீடு 400க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக முண்ட்கா பகுதியில் 498 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. காற்றின் தரக் குறியீடு 400ஐ கடக்கும்போது அது அபாய கட்டமாகக் கருதப்படுகிறது. இந்த அளவுக்கு மாசுபட்டுள்ள காற்றை 'உடல் ஆரோக்கியம் உள்ளவர்களையும் பாதிக்கக்கூடியது' என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகைப்படுத்தி உள்ளது.

இந்த காற்று மாசால் நுரையீரல் அடைப்பையும், பல நுரையீரல் பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடிய PM 2.5 என்ற துகள்களின் அளவு கடந்த வியாழக்கிழமை மாலை அதிகரித்துள்ளது. காற்றில் ஒரு கன மீட்டரில் 60 மைக்ரோகிராம் மட்டுமே இருக்கவேண்டிய PM2.5,நேற்று நகரத்தின் பல்வேறு இடங்களில் அதைவிட ஏழு முதல் எட்டு மடங்கு அதிகமாக இருந்ததாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்கப் பள்ளிகளுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வெள்ளி மற்றும் சனிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளார். அதேபோல காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் தேசிய தலைநகர் பகுதிக்கு (NCR) உட்பட்ட இடங்களில் அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டங்கள் கொண்ட நடவடிக்கை திட்டம் உள்ளது. அது Graded Response Action Plan- GRAP எனப்படும். காற்று மாசின் தீவிரத்தைப் பொறுத்து GRAP I, GRAP II ,GRAP III அல்லது GRAP IV அமல்படுத்தப்படும். தற்போது ஏற்பட்டிருக்கும் தீவிர மாசுபாடு காரணமாக GRAP III அமல்படுத்தப்படுகிறது என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, நகரத்தில் அவசியமற்ற கட்டுமானப் பணிகள் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும், அடுத்த 2 வாரங்களுக்கு காற்று மாசின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால், GRAP III அமல்படுத்தப்பட்டுள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய நுரையீரல் மற்றும் சுவாச பிரச்னைகளுக்கான துறையின் இயக்குநர் மருத்துவர், இந்த காற்று மாசு இது மிகவும் ஆபத்தான அளவை எட்டியுள்ளது. வெளியில் சென்றாலே, கண்களில் எரிச்சல், தொண்டையில் வலி உண்டாகிறது. எங்கள் மருத்துவமனையில் புறநோயாளிகளின் எண்ணிக்கை 20-30% அதிகரித்துள்ளது. விஷ வாயுக்கள் உடலுக்குள் செல்லும்போது, அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும். ஆனால் வேலைக்காக நாம் வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே வெளியில் செல்பவர்கள், முகக் கவசம் அணிந்து, உடலை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணிந்துகொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு, போதிய அளவு தண்ணீரும் உட்கொள்ள வேண்டும்,” என்றார்.

Tags :
Advertisement