”சொன்ன வேலையை சரியா பண்ணமாட்டீங்களா”..? புஸ்ஸி ஆனந்த் மீது கோபப்பட்ட விஜய்..? கட்சிக்குள் சலசலப்பு..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தீபாவளிக்கு பிறகு தனது கட்சியின் செயற்குழு கூட்டத்தை நடத்தி அடுத்தக்கட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தவெக பொதுச்செயலாளர் ஆனந்திடம், மாவட்ட வாரியாக சென்று அங்குள்ள கள நிலவரம் குறித்து ஆய்வு செய்து, யாரை பொறுப்பாளராக நியமிக்கலாம் என்பது குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதுவரை நிர்வாகிகள் நியமனம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
100 முதல் 130 மாவட்ட செயலாளர்களை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ள நிலையில், இதுவரை நியமிக்கப்படாமல் இருப்பதால், விஜய் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புஸ்ஸி ஆனந்திடம் தனது அதிப்ருதியை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய். இந்நிலையில், ஜனவரி இறுதிக்குள் கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளை முடித்து, மாவட்ட செயலாளர்கள் நியமனம் குறித்து தெரிவிக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
கட்சியின் முதலாம் ஆண்டு நிறைவுக்குள் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்றும் விஜய் அறிவுறுத்தியுள்ளார். மேலும், மார்ச் மாதம் முதல் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் முதல் மாநாட்டின் போதே விஜய் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என கூறிப்பட்டது. அந்த வகையில், மார்ச் மாதம் முதல் விஜய் பயணம் மேற்கொள்ள உள்ளதால், அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சுற்றுப்பயணம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : இனி சோசியல் மீடியாவில் கணக்கு துவங்க பெற்றோரின் அனுமதி தேவை..!! மத்திய அரசு அதிரடி..!!