For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பரிசோதனை’..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!!

Health Minister M. Subramanian said that this year, tests on cancer incidence will be conducted in all districts.
10:50 AM Aug 12, 2024 IST | Chella
’அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் பரிசோதனை’     அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவிப்பு
Advertisement

இந்தாண்டு அனைத்து மாவட்டங்களிலும், புற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டணப் படுக்கை அறைகள் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கோவை, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, ஈரோடு அரசு மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் வகையில் 20 படுக்கை அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் சாயக்கழிவு, தோல் தொழிற்சாலை, ரப்பர் உற்பத்தி கழிவுகளால், புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. இந்த 4 மாவட்டங்களில், 4.19 லட்சம் பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 176 பேருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

இதில், ஈரோடு மாவட்டத்தில் 50 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும், புற்றுநோய் பாதிப்பு குறித்த பரிசோதனைகள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

Read More : புதிய உறவுக்குள் நுழைகிறீர்களா..? அப்படினா மறக்காம இதை பண்ணுங்க..!!

Tags :
Advertisement