For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அலர்ட்..!! இந்திய மசாலா பிராண்டுகளில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

02:07 PM Apr 22, 2024 IST | Mari Thangam
அலர்ட்     இந்திய மசாலா பிராண்டுகளில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள்   ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Advertisement

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மசாலா பிராண்டுகளில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு அதிகம் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இது மூளை, நுரையீரல் உட்பட பாலியல் உறுப்புகளை பாதிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

Advertisement

கடந்த சில தினங்களுக்கு முன்பு Nestle மற்றும் Bournvita வில் அடிக்டிவ் சுகர் அதிகம் சேர்க்கப்படுவது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மசாலாப் பட்டியலில் பெரிய இந்திய நிறுவனங்களான எம்.டி.ஹெச், உணவு ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை.

புற்றுநோய்க்கான சர்வதேச நிறுவனம் எத்திலீன் ஆக்சைடை 'குரூப் 1 கார்சினோஜென்' என வகைப்படுத்தியுள்ளது. ஹாங்காங்கின் உணவு ஒழுங்குமுறை ஆணையம், MDH இன் மூன்று மசாலா பொருட்களான மெட்ராஸ் கறி தூள் (மெட்ராஸ் கறிக்கான மசாலா கலவை), சாம்பார் மசாலா (கலவை மசாலா தூள்), மற்றும் கறி தூள் (கலப்பு மசாலா தூள்) போன்றவற்றில் எத்திலீன் ஆக்சைடு உள்ளது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு அதன் வழக்கமான உணவு கண்காணிப்பு திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது, CFS ஹாங்காங்கில் உள்ள மூன்று சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்து தயாரிப்புகளை எடுத்தது. "சோதனை முடிவுகள் மாதிரிகளில் பூச்சிக்கொல்லி, எத்திலீன் ஆக்சைடு இருப்பதைக் காட்டியது" என்று CFS செய்தித் தொடர்பாளர் கூறினார்.

IANS இன் அறிக்கையின்படி, "விற்பனையை நிறுத்தவும், பாதிக்கப்பட்ட பொருட்களை அலமாரிகளில் இருந்து அகற்றவும் ஒழுங்குமுறை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு ஒழுங்குமுறையில் உள்ள பூச்சிக்கொல்லி எச்சங்களைக் கொண்ட மனித நுகர்வுக்கான உணவை உண்பது ஆபத்தானதாகவோ அல்லது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காததாகவோ இருந்தால் மட்டுமே விற்கப்படலாம். புற்றுநோய் ரசாயம் கலந்த மசாலா பொருட்களை விற்பனை செய்தால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக $50,000 அபராதமும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்" என்று CFS செய்தித் தொடர்பாளர் கூறினார்.

எத்திலீன் ஆக்சைடு அளவுகளில் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறுவதால், எவரெஸ்டின் மீன் கறி மசாலாவை திரும்பப் பெற சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) உத்தரவிட்டது. குறைந்த அளவு எத்திலீன் ஆக்சைடு கொண்ட உணவுகளை உட்கொள்வதால் உடனடி ஆபத்து இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி எத்திலீன் ஆக்சைடு சேர்க்கப்படுவதால் காது, மூக்கு, தொண்டை, நூரையீரல், மூளை மற்றும் பாலியல் உறுப்புகளை பாதிக்கலாம். இதன் விளைவாக பாலியல் மற்றும் இனப்பெருக்க செயல்பாடுகள் தடைபடுகிறது.

இதுகுறித்து டாக்டர் கிலாடா கூறியதாவது, ”எத்திலீன் ஆக்சைடை உள்ளிழுக்கும் போது புற்றுநோய் ஏற்படுகிறது. எத்திலீன் ஆக்சைடு ஒரு வாயு, அது ஏதாவது ஒன்றில் பரவும் போது புற்றுநோயை உண்டாக்கும். இதுதவிர உணவு பொருட்களில் பயன்படுத்தப்படும் பல கலரிங் ஏஜெண்டுகள் புற்றுநோயை உண்டாக்கும்” என தெரிவித்தார்.

Tags :
Advertisement