For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்களில் 2 நாட்களுக்கு ரத்து..!! பயணிகள் அதிர்ச்சி..!!

10:32 AM Apr 02, 2024 IST | Chella
சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் முக்கிய ரயில்களில் 2 நாட்களுக்கு ரத்து     பயணிகள் அதிர்ச்சி
Advertisement

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை புதன்கிழமை ரத்து செய்யப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று 2ஆம் தேதி இரவு மற்றும் 3ஆம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, கும்மிடிப்பூண்டியில் இருந்து இன்று இரவு 8:15 மணி, 9:15 மணிக்கு சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில்களும், மறு மார்க்கத்தில் சென்ட்ரலில் இருந்து இரவு 9:45, 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

இதே போல நாளை அதிகாலை கும்மிடிப்பூண்டியில் இருந்து 3.50, 4.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயிலும், சென்ட்ரலில் இருந்து காலை 5.40, 6.25 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், சூலூர்பேட்டையில் இருந்து இன்று இரவு 8:20, 9.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்ல வேண்டிய மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை ரயில் நிலையம் சென்றடையும் எனவும், சென்ட்ரலில் இருந்து இன்றிரவு 11.45, 12.15 மணிக்கு ஆவடிக்கு இயக்கப்பட வேண்டிய மின்சார ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Savings | குறைந்த முதலீடு அதிக லாபம்..!! தபால் துறையின் சூப்பர் திட்டம்..!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Advertisement