Canada | வரலாறு காணாத மக்கள் தொகை அதிகரிப்பு.!! 3 மடங்காக உயர்ந்த இந்திய குடியேற்றங்கள்.!!
Canada: 2023 ஆம் ஆண்டில் கனடா நாட்டின் மக்கள் தொகை 40.33 மில்லியனை எட்டியதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. மக்கள் தொகை அதிகரித்ததற்கு தற்காலிக குடியேற்றங்கள்(Immigrants) முக்கிய காரணமாக அமைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வெளியாக இருக்கும் தகவல்களின்படி 2023 ஆம் ஆண்டு கனடா(Canada) நாட்டில் 12,70,000 பேர் குடியேறி உள்ளனர்.ட இது 2022 ஆம் ஆண்டை விட 3.2% அதிகமாகும். 1957 ஆம் வருடத்திற்கு பிறகு கனடா நாட்டு மக்கள் தொகையில் மிக உயர்ந்த வளர்ச்சி இது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2024 ஆம் வருடம் கனடாவின் மக்கள் தொகை வளர்ச்சியில் 97.6% வெளிநாட்டில் இருந்து கனடாவிற்கு குடி பெயர்ந்த மக்களால் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 2.4% இயற்கையான மக்கள் தொகை வளர்ச்சி என ஸ்டேட்ஸ்கேன் அறிக்கை தெரிவிக்கிறது. வெளிநாட்டு மக்களின் குடிப்பெயர்வில் நிரந்தர மற்றும் தற்காலிக குடியேற்றங்களும் அடங்கும் எனவும் அந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
கனடா நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சியில் தற்காலிக கொடியேற்றம் தொடர்ச்சியாக இரண்டவது ஆண்டாக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக நிரந்தர குடியிருப்பாளர்கள் அல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர்கள் கனடா நாட்டில் குடியேறியவர்களின் எண்ணிக்கையில் அதிகம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. கனடா நாட்டின் அதிகாரப்பூர்வ விசா இணையதளத்தின் புள்ளி விவரங்களின்படி ஒவ்வொரு ஆண்டும் 1,20,000 க்கும் அதிகமானோர் கனடா நாட்டில் நிரந்தர குடியிருப்பாளர்களாக தங்குகிறார்கள். மேலும் கனடா இப்போது உலகின் மிகப்பெரிய இந்திய புலம்பெயர்ந்தோரில் ஒன்றாக உள்ளது.
கனடா நாட்டில் 2013 ஆம் வருடம் 32,238 இந்திய குடிமகன்கள் நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளனர். 2022 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 260 சதவீதம் அதிகரித்திருக்கிறது.1,18,095 பேர் கனடா நாட்டின் குடியுரிமை பெற்று இருக்கிறார்கள் என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
2023 ஆம் வருடம் இந்தியா மற்றும் கனடா நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட சில அரசியல் பிரச்சனைகளை தொடர்ந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) தரவுகளின்படி, டிசம்பர் மாதத்திற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2022 ஆம் வருடம் 16,796 ஆக இருந்தது 2021 ஆம் வருடம் 6,329 ஆக குறைந்துள்ளது.