சூப்பர் வேலை..!! அதிரடியாக அறிவித்த எலான் மஸ்க்..!! சம்பளம் எவ்வளவு தெரியுமா..?
உங்களால் ஒரு நாளைக்கு 7 மணி நேரம் நடக்க முடியும் என்றால், நாளொன்றுக்கு ரூ.28,000 சம்பாதிக்கலாம். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உலக பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, அறிவித்துள்ள வேலைவாய்ப்பு இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எலான் மஸ்க், கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்டிமஸ் என்ற மனித உருவ ரோபோ குறித்த திட்டத்தை அறிமுகம் செய்தார்.
தொழிற்சாலை வேலை முதல் பராமரிப்பு பணிகள் வரை அனைத்து பணிகளையும் செய்யும் திறன் கொண்ட வகையில் ரோபோ தயாரிக்கப்படும் என அறிவித்திருந்தார். கடந்த ஓராண்டாக இந்த ரோபோவை தயார் செய்வதில் தீவிர முனைப்பு காட்டி வரும் டெஸ்லா நிறுவனம், அதன் ஒரு பகுதியாகவே இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
'தரவு சேகரிப்பு உதவியாளர்' என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பில், ஒருவர் மோஷன்-கேப்சர் சூட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் ஆகியவற்றை அணிந்து கொண்டு, தினமும் 7 மணி நேரத்திற்கு சோதனை வழியில் நடக்க வேண்டும் என்றும் இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் 5'7" முதல் 5'11" அடி உயரம் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாள் முழுவதும் நிற்க, உட்கார, நடக்க, குனிய, வளைய மற்றும் திரும்ப என அனைத்து உடல் சார்ந்த திறன் பெற்றிருக்க வேண்டும். இந்த பணிக்கு தகுதியானவர்களுக்கு அவர்களின் அனுபவம், திறன் மற்றும் இருப்பிடத்தை பொறுத்து ஒரு மணி நேரத்திற்கு $25.25 முதல் $48 வரை, அதாவது ரூ.2,120 முதல் ரூ.4,000 வரை வழங்கவுள்ளதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைக்கான விண்ணப்பங்களை டெஸ்லா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், பணியிடம் கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Read More : இந்த பிசினஸ் தொடங்கப் போறீங்களா..? அரசின் மானியம் குறித்து தெரிஞ்சிக்கோங்க..!!