இறந்தவரின் கைரேகையை வைத்து ஃபோனை அன்லாக் செய்ய முடியுமா..? பலருக்கும் தெரியாத உண்மை..!!
தற்போதைய காலக்கட்டத்தில் கைரேகை பயன்பாடு என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக ஆதார் அட்டை, பாஸ்போர்ட் போன்றவற்றில் அதிகமாக கைரேகை பயன்படுத்தப்படுகிறது. இதேபோல், செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் கைரேகையைப் பயன்படுத்துகிறோம். ஆனால், நாம் எப்போதாவது யோசித்து இருக்கிறோமா? ஒருவர் இறந்த பிறகு அவரது கைரேகையை வைத்து போனை அன்லாக் செய்ய முடியுமா என்று?. ஒரு நபர் இறந்த பிறகு, அவரது உடல் இறுக்கமாகிறது மட்டுமல்லாமல் விரல்கள் இறுக்கப்படுகின்றன.
அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் கைரேகைகளைப் பெறுவதற்கு அதிக முயற்சி எடுக்க வேண்டும். ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவரது கைரேகைகள் முன்பு போல் நம்ப முடியாததாக இருக்கும். உயிருடன் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்களின் கைரேகைகளில் பல மாற்றங்கள் உள்ளன. அதை தடயவியல் நிபுணர் அல்லது ஆய்வகத்தில் மட்டுமே கண்டறிய முடியும்.
கைரேகை வேலை செய்யும் முறை குறிப்பாகக் கைரேகை சென்சார் விரல்களில் உள்ள ரேகையின் மேடு, பள்ளங்களை வைத்துத் தான் வேலை செய்கின்றன. பெரும்பான்மையான செல்போன்களில் 2 விதமான பிங்கர் பிரின்ட் சென்சார் பயன்படுத்தப்படுகிறது. அதில், முதலாவதாக நமது உடலில் உள்ள மின்கடத்தலை பயன்படுத்தி, விரலில் உள்ள மேடு பள்ளத்தை ஸ்கேன் செய்யும் கடத்தல் வகை, 2-வதாக அல்ட்ரா சோனிக் ஸ்கேனர். இதில் ஒளிக்கற்றையை விரலுக்கு அனுப்பி அது மூலமாக ரேகை ஸ்கேன் செய்யப்படும்.
இப்படி இரண்டு வழிகளில் தான் நமது உடலில் கைரேகை ஸ்கேன் வேலை செய்யப்படுகிறது. ஆனால், ஒருவர் இறந்த பிறகு ரத்த ஓட்டம் நின்று விடும். இதனால் இறந்தவரின் கைரேகை மாறிவிடும். இந்நிலையில், தற்போதுள்ள ஆராய்ச்சியின் படி, ஒருவர் இறந்த பிறகு உடனே கைரேகை வேலை செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், நேரம் போக போக கைரேகை வேலை செய்வது குறைந்துவிடும். இதனால், துல்லியமான ரேகையைப் பெறுவது சாத்தியமில்லாமல் போகும்.
உதாரணமாக 2018இல் புளோரிடா போலீசார் இறந்த பிளிப்ஸ் என்பவரின் உடலில் இருந்து இறந்து 72 மணி நேரத்திற்குப் பிறகு கைரேகையைப் பெற்று, அவரது செல்போனை அன்லாக் செய்ய முயற்சித்தனர். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. இதற்கு இறந்தவுடன் அவரது கைரேகையில் உள்ள ரத்தம் ஓட்டம் மற்றும் மின் கடத்தல் முற்றிலும் நிறுத்தப்பட்டதே காரணம் ஆகும். ஆகையால், இறந்தவரின் கைரேகை வைத்து செல்போனை அன்லாக் செய்ய முடியாது.
Read More : ’அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு ஓகே சொன்னால்தான் சினிமா வாய்ப்பு’..!! ’முதலில் நிர்வாணமாக பார்ப்பதே இவர்தான்’..!!