உங்களுக்கு ஒரு சேலஞ்ச்! இந்த படத்தில் இருக்குற 3 வித்தியாசங்கள 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் என்பவை ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மிக்கவை. உங்கள் அறிவுத்திறனை, பார்வைத்திறனை கூட இதன் மூலம் சோதிக்கலாம்.
இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களை முதலில் பார்க்கும் போது இரண்டு படமும் ஒரே போல இருக்கின்றது என்று தான் தோன்றும். ஆனால் உற்று பார்த்தீர்கள் என்றால் இதில் 3 வித்தியாசங்கள் இருக்கிறது தெரியும். கண்டுபிடித்து என்னென்ன என்பதை சொல்லுங்கள். ஒளியியல் மாயை என்றும் அழைக்கப்படும் இந்த இல்யூஷன் படங்கள் புதிர் மிக்கவையாக இருப்பதால் சில தேர்வுகளில் கூட இதை வைப்பதாக சொல்கிறார்கள்.
இந்த படங்கள் சவால் மிக்கவையாக இருப்பதால் பலரும் தங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கும் பகிர்ந்து அவர்களுக்கு சவால் விடுக்கிறார்கள்.. இதனால், நெட்டிசன்கள் மத்தியில் இந்த படங்களுக்கு தற்போது தனி வரவேற்பு உள்ளது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்.. நாம் இன்று பார்க்க இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மூன்று வித்தியாசங்கள் உள்ளன. அவற்றை கண்டுபிடிப்பதுதான் டாஸ்க்...
ஒரே மாதிரியான இரண்டு படங்கள் உள்ளன. இரண்டு படங்களிலுமே நீல நிற கார் உள்ளது. வீட்டின் கார் ஷெட்டில் இருந்து வெளியே எடுத்து விடப்பட்ட நிலையில் கார் உள்ளது. கார் நிற்கும் இடங்களிலும் ஆங்காங்கே கறைகள் தென்படுகின்றன. இந்த இரு படங்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும் இரண்டும் ஒரே மாதிரியானவை இல்லை.
உங்களில் பலரும் படத்தில் உள்ள மூன்று வித்தியாசங்களையும் கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம். கண்டுபிடித்தவர்களுக்கு பாராட்டுக்கள்.. உண்மையாகவே நீங்க செம ஷார்ப்தான்.. படத்தில் விடையை கண்டுபிடிக்க முடியவில்லை என நினைப்பர்களுக்கு சில டிப்ஸ் கொடுக்கிறோம். அதை வைத்து விடையை கண்டுபிடித்துவிடலாம்.