பழங்களை ஜூஸ் போட்டு குடித்தால் சத்து கிடைக்குமா..? பலருக்கும் தெரியாத தகவல்..!!
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பழச்சாறு குடிப்பது நல்லது என பலரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அது மிகவும் தவறானது என நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் 5 காரணங்களை பார்க்கலாம்.
நார்ச்சத்து நீக்கம் : பழங்களை முழுமையாக சாப்பிடுவதில் இருக்கும் நன்மை என்னவென்றால், அதில் இருக்கும் நார்ச்சத்துதான். ஆனால், நாம் பழங்களை பிழிந்து சாறு எடுக்கும்போது, நார்ச்சத்து நீக்கப்பட்டு, வெறும் பழச்சாறை மட்டுமே குடிக்கிறோம். இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
பற்களுக்கு பாதிப்பு : பழச்சாறில் அமிலமும், இயற்கையான சர்க்கரையும் இருப்பதால், அவை பற்சிதைவு மற்றும் ஈறு பாதிப்புக்கு காரணமாக அமையும். எனவே, பழச்சாறை அடிக்கடி குடித்தால், பற்கள் பாதிக்கப்படும். பழங்களை கடித்து சாப்பிடும்போது, பற்கள் வலிமை பெறும்.
உடல் எடை அதிகரிப்பு : பழச்சாறை குடிக்கும்போது, அவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ள தூண்டும். அப்படி இருக்கையில், உடல் எடை அதிகரிக்கும். ஆனால், பழத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளும்போது, நமது வயிறு நிரம்பி, அடிக்கடி சாப்பிடுவது தவிர்க்கப்படும்.
ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு : பழத்தை ஜூஸ் போட்டு குடிக்கும்போது, அதில் இருக்கும் நார்ச்சத்து நீக்கப்படுவதால், நமது உடலில் எளிதாக சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஏனென்றால், நமது உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது நார்ச்சத்து. ஆனால், நார்ச்சத்தை தவிர்க்கும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக உயரும்.
ஊட்டச்சத்துகள் இழப்பு : பழத்தை ஜூஸ் போடும்போதே அதில் இருக்கும் பெரும்பாலான ஊட்டச்சத்துகள் போய்விடும். குறிப்பாக, விட்டமின்கள், மினரல்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் எனப்படும் ஆக்சிஜனேற்றிகள் ஆகியவை பழச்சாறுகளில் மிகவும் குறைந்துவிடும். அந்த பழச்சாறை உடனடியாக குடிக்காவிட்டால், இருக்கும் ஊட்டச்சத்துகளும் அழிந்துவிடும்.
Read More : நீங்கள் அதிக நேரம் காரில் பயணிப்பவரா..? புற்றுநோய் ஏற்படும் அபாயம்..!! வெளியான அதிர்ச்சி அறிக்கை..!!