மறக்கமுடியுமா?… அதே டிசம்பர் மாதம்!… 2004 வார்னிங் கொடுத்த நிலநடுக்கம்!… பிலிப்பைன்சில் சுனாமி எச்சரிக்கை!
பிலிப்பைன்சின் மிண்டானா நகர் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மிண்டானோவோ தீவில் கடற்பகுதியின் மையத்தின் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்களும், வீடுகளும் பயங்கரமாக அதிர்ந்ததால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இது மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இந்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும், தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளும் இந்த சுனாமி எச்சரிக்கையால் கலக்கத்தில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், பொதுவாக டிசம்பர் என்றாலே இயற்கை பேரிடர்கள் நிகழும் என ஒருவித நம்பிக்கை நிலவி வரும் நிலையில், இந்த சுனாமி எச்சரிக்கை மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிலிபைன்ஸ்சில் கடந்த மாதம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்கு உயிர்சேதமும் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் அங்கு 8 பேர் பலியாகினர். இந்த நிலையில், மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கமே, தெற்காசியாவில் இந்தியா உட்பட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தக் கூடிய சுனாமி வருவதற்கு காரணமானது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமி தெற்காசிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. சுமார் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். மேலும் லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்தனர். இந்தநிலையில், தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர்.