முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாமாயிலை உணவு சமைக்க பயன்படுத்தலாமா?

Can palm oil be used for cooking?
05:25 AM May 27, 2024 IST | Baskar
Advertisement

பாமாயில் உண்மையிலேயே நல்ல எண்ணெய் வகைகள் தானா அவற்றினால் ஏற்படும் தீமைகள் மற்றும் நல்லவைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Advertisement

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் அட்டை மூலமாக பாமாயில் விநியோகம் செய்கிறது. ரேஷனில் கொடுக்கும் அரிசி,சக்கரையை எப்படி மக்கள் பயன்படுத்துகிறார்களோ, அப்படியே பாமாயில் எண்ணெய்யையும் பயன்படுத்துகிறார்கள்.

உலக அளவில் மொத்த எண்ணெய் உற்பத்தில் பாமாயில் 40 சதவீத பங்கை வகிக்கிறது. சிவப்பு நிறத்தில் உள்ள பழத்தில் இருந்து பாமாயில் கிடைக்கிறது. இதில் சுத்திகரிக்கப்படாத பாமாயில் என்றும், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் என்றும் இரண்டுவிதமாக இவை கிடைக்கிறது. பாமாயிலில் 45 சதவீதம் பால்மெட்டிக் ஆசிட் என்று சொல்லக்கூடிய நிறை கொழுப்பு உள்ளது. மீதம் உள்ள 40 சதவீதம் ஒலியிக் ஆசிட் என சொல்லக்கூடிய நிறைவுறாக் கொழுப்பு உள்ளது. இதுமட்டுமின்றி 5 சதவீதத்திற்கும் குறைவாக ஸ்டியரிக் ஆசிட், லினோலிக் ஆசிட் ஆகியவை உள்ளது.

நிறைக்கொழுப்பு என்பதே மிகவும் ஆபத்தானது என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது. ஆனால் தேங்காய் எண்ணெயில் 90 சதவீதம் நிறைக் கொழுப்பு உள்ளது. நெய் மற்றும் வெண்ணெயிலும் நிறை கொழுப்பு உள்ளது.பாமாயில் விரைவில் கெட்டியாக கூடிய தன்மை உள்ளதால் அதை பிரிக்க ஒலியிக் ஆசிட் என்று சொல்லக்கூடிய நிறைவுறாக் கொழுப்பை அதிகப்பட்டுத்திவிடுவார்கள். அதனை பாம்ஒலி என்று சொல்வார்கள். அதனை நாம் பாமாயில் என்று பயன்படுத்தி வருகிறோம்.

அதிக நிறைக்கொழுப்புகளை கொண்டு உள்ளதால் தேங்காய் எண்ணெய் பனிக்காலத்தில் கெட்டியாகிவிடும். ஆனால் அதில் நிறைவுறாக் கொழுப்பு இருந்தால் அது கெட்டி ஆகாது.பாம்ஒலின் என்று சொல்லக்கூடிய எண்ணெய்யைத் தான் பாமாயில் என்று நாம் பயன்படுத்துகிறோம்.

தேங்காய் எண்ணெயில் 92 சதவீதம் நிறைக் கொழுப்புக்கள் உள்ளது. ஆனால் அதில் லாரிக் ஆசிட் உள்ளிட்ட ஆரோக்கியமான கொழுப்புக்கள்தான் உள்ளது. இதனால் இவை ஆரோக்கியமானது என்றுதான் ஆய்வுகள் கூறுகின்றன.கடலை எண்ணெயில் 15 முதல் 20 சதவீதம் நிறைக் கொழுப்பு (Saturated fat) உள்ளது. பாமாயிலில் இந்த நிறை கொழுப்பு 40 சதவீதம் உள்ளது.மிகுந்த ஆரோக்கியமானது என கூறப்படும் மோனோ அன்சேச்சுரேட்டட் பேட்டியாட்டிட் (Mono unsaturated fat) தன்மை தேங்காய் எண்ணெயில் வெறும் 5 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால் பாமாயில் மற்றும் கடலை எண்ணெயில் 40 முதல் 45 சதவீதம் வரை உள்ளது.

ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை கொண்ட பாலி அன்சேச்சுரேட்டட் பேட்டியாட்டிக் (Poly unsaturated fat) தேங்காய் எண்ணெயில் 5 சதவீதம் உள்ளது. ஆனால் இதுவே பாமாயிலில் 10 முதல் 15 சதவீதமும், கடலை எண்ணெயில் 30 முதல் 40 சதவீதமும் உள்ளது. பாமாயில் கொலஸ்டாரலை அதிகம் ஏற்படுத்தும் என்று எந்த அராய்ச்சிகளிலும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை" என கூறப்படுகிறது. மக்கள் பயப்படும்படி பாமாயில் அந்த அளவுக்கு கெடுதல் கிடையாது. சுத்திகரிக்கப்பட்டு பாமாயில் வருகிறது. அப்படி செய்யும் போது சில கெடுதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Read More: ‘ஐஸ்கிரீமில் விஷம்..!’ குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. கணவர் கைது!

Tags :
palm oil for cooking
Advertisement
Next Article