2024 பாராளுமன்றத் தேர்தல்.! பாஜகவை வீழ்த்துமா இந்தியா கூட்டணி.? கருத்துக் கணிப்பை வெளியிட்ட அமெரிக்க நிறுவனம்.!
பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆட்சியைப் பிடிக்க போகும் கட்சி எது என்பது தொடர்பான கணிப்பை அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான என்டிஏ கூட்டணி 2019 ஆம் வருட தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சியிலிருந்து வருகிறது. இந்தக் கூட்டணியை முறியடிப்பதற்காக 2024 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் திமுக காங்கிரஸ் ஆம் ஆத்மி உட்பட 23 கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் நியூயார்க் நகரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் நிதி நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்ஸ் இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தனது யுகங்களை வெளியிட்டு இருக்கிறது. அந்த நிறுவனத்தின் கருத்துப்படி 2024 ஆம் ஆண்டிலும் பிரதமர் மோடி தலைமையிலான என் டி ஏ கூட்டணி வெற்றி பெறும் என தெரிவித்திருக்கிறது. அதற்கு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் பரந்த கொள்கைகளே காரணம் எனவும் தெரிவித்திருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் என்றாலும் பெரும்பான்மை எண்ணிக்கையில் சில மாறுபாடுகள் இருக்கலாம் எனவும் தெரிவித்திருக்கிறது. நாடு முழுவதிலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கும் ஆதரவு இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு முக்கியமான ஒன்று என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் பல கருத்துக்கணிப்புகளும் இந்த கருத்தையே உணர்த்துவதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்து இருக்கிறது.