முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இறந்தவரின் ஆடையை அணியலாமா? ஜோதிட சாஸ்திரம் சொல்வது என்ன?

05:40 AM May 29, 2024 IST | Baskar
Advertisement

வீட்டில் அடிக்கடி பிரச்னைகள் வருவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கூட, இறந்தவர்களின் சில பொருட்களை வைப்பதாலும் பிரச்னைகள் தொடரும் என சொல்லப்படுகிறது.

Advertisement

இறந்தவர்களின் ஆடைகளை அணியக்கூடாது:

இறந்தவர்களின் சில பொருட்களை வீட்டில் இருந்து அகற்றுவதன் மூலம் மகிழ்ச்சியடையலாம். மேலும் அவற்றை எரித்தோ அல்லது தண்ணீரில் மிதக்கவோ விட வேண்டும் என ஜோதிட முறைப்படி கூறப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் இறந்தவர்களின் பொருட்களை பயன்படுத்தக்ககூடாதாம். அதிலும் குறிப்பாக ஆடையை அணியக்கூடாதாம். பலர் இறந்தவர்களின் நியாபகமாக அவர்களின் உடையை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் அதை உபயோகப்படுத்துவார்கள். அது மிகவும் தவறு என சொல்லப்படுகிறது.

இறந்தவர்களின் காலணிகளை அணியக்கூடாது:

இறந்தவர்களின் காலணிகள், கைக்கடிகாரங்கள் என எந்த அன்றாட பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது. அது தங்க நகையாகவே இருந்தாலும் அதை அழித்து விட்டு வேறு செய்ய வேண்டுமே தவிர அதை உபயோகப்படுத்தக்கூடாது என்று சொல்லப்படுகிறது.

படுக்கை, பாய் பயன்படுத்தக்கூடாது:

இறந்த நபர் பயன்படுத்திய படுக்கை, பாயை பயன்படுத்தக்கூடாது என சொல்லப்படுகிறது. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் பணிகள் தடைபட்டு, பிரச்சனைகளில் முடியும். இவ்வாறு செய்வதால் தீய சக்தியின் தாக்கம் அதிகரிக்குமாம். அதனால் இறந்தவர்களின் இந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அதை ஆற்றில் மிதக்க விட வேண்டும் அல்லது எரித்து விட வேண்டும் என ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.

Read More: ‘நாள் முழுவதும் உழைத்தாலும் வெறும் 50 ரூபாய் தான் சம்பளம்…!!’ எந்த நாடு தெரியுமா?

Tags :
ஆன்மிகம்இறந்தவர்இறந்தவர் பொருட்கள்
Advertisement
Next Article