முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

T20 World Cup 2024: 'டி20 உலக கோப்பையில் இடம் பெறுவாரா ஹர்திக் பாண்டியா.?"… ரோஹித் சர்மா தலைமையில் அவசர ஆலோசனை.!!

02:18 PM Apr 16, 2024 IST | Mohisha
Advertisement

T20 World Cup: வருகின்ற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம் பெறுவது கேள்விக்குறியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

Advertisement

இந்திய அணியின் முன்னணி வேகபந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா 2023 ஆம் வருட 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறினார். இந்நிலையில் டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் டிரேடிங் முறையில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடமிருந்து ஹர்திக் பாண்டியாவை வாங்கிய மும்பை அணி ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

2024 ஆம் வருட டி20 உலக கோப்பை தொடர் வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருப்பதால் உலகக் கோப்பையில் விளையாட இருக்கும் இந்திய வீரர்களை தேர்வு செய்வது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அவர்கள் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது ஹர்திக் பாண்டியாவை அணியில் சேர்ப்பது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து பந்தி வீசினால் மட்டுமே அவரால் அணியில் இடம்பெற முடியும் என இந்த விவாதத்தின் போது முடிவு செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஹர்திக் பாண்டியா 131 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். மேலும் 3 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதனால் டி20 உலக கோப்பை இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் இடம் கேள்விக்குறியாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More: பட்ஜெட் பிரிவில் புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த ரியல்மி!! விலை என்ன தெரியுமா?

Advertisement
Next Article