முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விரைவில் அமைச்சரவை மாற்றம்? யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு!! கசிந்த உளவுத்துறை ரிப்போர்ட்!!

05:15 AM May 18, 2024 IST | Baskar
Advertisement

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் முடிவுகள் வந்ததும் அமைச்சரவை மாற்றம் உறுதியாக இருக்கும் என்கிறார்கள். அது தொடர்பான சில முக்கிய தகவல்களும் வெளியாக தொடங்கி உள்ளன.

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல்நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.2024 மக்களவைத் தேர்தலின் முதல் நான்கு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், நாடு இப்போது ஐந்தாவது கட்ட பொதுத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. நடந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு மே 20ஆம் தேதி 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெறுகிறது. அமைச்சரவை மாற்றம்: இந்த நிலையில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்ததும் திமுகவில் பின்வரும் மாற்றங்கள் தேர்தல் ரிசல்ட் வந்ததும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் இருக்கும். 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அமைச்சரவை மாற்றம் இருக்கும். சரியாக 5 வாரங்களுக்கு பிறகு அதாவது ஜூன் 2ம் வாரம் பின்வரும் மாற்றங்கள் திமுகவில் நடக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

யார் யாருக்கு என்னென்ன பொறுப்பு?

1) உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி
2) புதிய அமைச்சர்கள் ஆட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு
3) இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் சேர்க்கப்பட வாய்ப்பு
4) கூடுதலாக ஒரு சிறுபான்மையினர் அமைச்சர் சேர்க்கப்பட்டு ஒரு அமைச்சர் நீக்கப்படுவார்.
5) பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

6) தெற்கில் உள்ள குறிப்பிட்ட சாதியை சேர்ந்த ஒருவர் அமைச்சராக உள்ளார்.

தமிழ்நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் நடக்க போகிறது. திமுக ஆட்சி கட்சியாக இருக்கிறது. வலிமையான கூட்டணி வைத்துள்ளனர். இதனால் ஒரு இடங்களில் கூட தோற்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இதை மீறி அந்த கட்சி தோற்க முடியாது. அப்படியும் தோல்வி அடைந்தால் அதன் அர்த்தம் உள்ளடி வேலைகள் என்பதுதான். அதாவது கட்சிக்கு உள்ளேயே சிலர் பார்த்த உள்ளடி வேலைகள் காரணமாக தோல்வி அடைவோமோ என்ற எண்ணம் உள்ளது. இப்படி உள்ளடி வேலை பார்த்த அமைச்சர்கள் நீக்கப்படலாம்.

பிடிஆருக்கு பொறுப்பு:

அமைச்சர் பிடிஆருக்கு உயரிய பொறுப்பு ஒன்று அளிக்கப்படலாம். அதாவது அமைச்சரவையிலேயே உயரிய இலாக்கா வரும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு ப்ரோமோஷன் கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதே போல அமைச்சர் உதயநிதியிடம் உள்ள விளையாட்டு துறை மாற்றப்படலாம் என்கிறார்கள். அதோடு இல்லாமல் சபரீசன் நடத்தும் பென் அமைப்பு சார்பாகவும் ரிப்போட் சென்றுள்ளது. அவர்களும் சர்வே நடத்தி உள்ளனர். சில முக்கிய தொகுதிகளில் பொறுப்பாளர்கள், பொறுப்பு அமைச்சர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்று ரிப்போர்ட் கிடைத்துள்ளது. 5-6 அமைச்சர்கள் மீது புகார் சென்றுள்ளது. கடைசி கட்டத்தில் செய்த பணிகள் காரணமாக திமுகவிற்கு வெற்றி இருக்கும். 5-6 தொகுதிகளில் சரிவு இருக்கும். அந்த அமைச்சர்களை வேண்டுமானால் ஸ்டாலின் மாற்றும் வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது.

Read More: பாத்ரூம் வீடியோவை லீக் செய்த முன்னாள் காதலன்! – இவ்வளவு கீழ்த்தரமானவரா..? பிரபல நடிகை ஆதங்கம்

Advertisement
Next Article