முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

16-வது நிதிக்குழுவிற்கான பணியிடங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்...!

09:07 AM Jan 19, 2024 IST | 1newsnationuser2
Advertisement

16-வது நிதிக்குழுவிற்கான பணியிடங்களை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியலமைப்பு சட்டம் 280-வது பிரிவின் கீழ், 2023 டிசம்பர் 31 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையின்படி 16-வது நிதிக்குழுவிற்கு இணைச் செயலாளர் நிலையில் மூன்று பணியிடங்களை அதாவது, இரண்டு இணைச் செயலாளர் பணியிடம், ஒரு பொருளாதார ஆலோசகர் பணியிடம் ஆகியவற்றை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Advertisement

புதிதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோர் நிதிக்குழுவின் பணிகளை மேற்கொள்ள உதவி புரிய வேண்டும். குழுவின் மற்ற அனைத்துப் பணியிடங்களும் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களின்படி ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன.

அதே போல, ஐரோப்பிய யூனியன் - இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் (TTC) செயல்திட்டத்தின் கீழ் குறைக்கடத்திகள் (செமிகண்டக்டர்) சூழல் அமைப்புகள், அதன் விநியோகச் சங்கிலி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகள் குறித்த நடைமுறைகளுக்காக இந்திய அரசுக்கும், ஐரோப்பிய ஆணையத்துக்கும் இடையே 2023 நவம்பர் 21 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Tags :
central govtFinance commissionmodi
Advertisement
Next Article