Byju's CEO அர்ஜுன் மோகன் திடீர் ராஜினாமா!! காரணம் என்ன?
இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் நிறுவனமான பைஜூஸ்-ன் தலைமை நிர்வாக அதிகாரி அர்ஜுன் மோகன் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் நிறுவனமான பைஜூ, குறுகிய காலத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிறுவனத்தின் இந்திய தலைமை நிர்வாக செயல் அதிகாரியாக அர்ஜுன் மோகன் பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளதாகவும், இதனால் பைஜூவின் நிறுவனர் ரவீந்திரன் தலைமைபொறுப்பேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பைஜூ நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு பின்னர், அர்ஜுன் மோகனை தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பைஜூ நிறுவனத்தில் நம்பிக்கைக்குரிய வகையில் செயல்பட்டு வந்த அர்ஜூன் மோகன் வெளியேற்றப்படுவதற்கான காரணங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
அர்ஜுன் மோகனின் வெளியேற்றத்தை தொடர்ந்து, ரவீந்திரன் தலைமைபொறுப்பேற்று அவர் பைஜூவின் செயல்பாடுகளை கண்காணிப்பார். பைஜூ அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், 4 ஆண்டுகளுக்கு பின் ரவீந்திரன் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் மோகன் தனது ராஜினாமாவை ரவீந்திரனிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அதன் பிறகு பைஜூ நிறுவுவனத்தின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். மோகனின் வெளியேற்றத்திற்கு பின்னர் பைஜூவை வழிநடத்தும் ரவீந்திரன், செயற்கை நுண்ணறிவு மற்றும் டியூசன் சென்டர் வாயிலாக பைஜூவை மூன்று பிரிவாக ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் தான் பைஜூ தனது டியூசன் எண்ணிக்கையை 250 அளவில் குறைத்து, பெங்களூரில் செயல்படும் பல அலுவலகத்தையும் காலி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.