முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விளவங்கோடு இடைத்தேர்தல்..!! வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் அறிவிப்பு..!!

01:47 PM Apr 16, 2024 IST | Chella
Advertisement

விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ விஜயதரணி அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து கொண்டார். இதனால், தான் வகித்து வந்த சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் அவர் ராஜினாமா செய்தார். இதற்கிடையே, ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதோடு சேர்த்து விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

Advertisement

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். விளவங்கோடு சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் நந்தினியும், அதிமுக சார்பில் மாநில மகளிர் அணி செயலாளர் ராணியும், காங்கிரஸ் சார்பில் தாரகையும் போட்டியிடுகின்றனர்.

விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிர்வாகிகளை நியமித்து மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலில் வரும் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Read More : தயிர் மற்றும் மோரில் எது சிறந்தது..? இந்த கோடை வெயிலுக்கு எதை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்..?

Advertisement
Next Article