AC| கோடை காலத்தில் ஏசி வாங்குறீங்களா.? நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில டிப்ஸ்.!
AC: தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் கோடைக்காலம் ஆரம்பம் ஆவதற்கு முன்பே கடும் வெயில் வாட்டி வதைக்கிறது . பிப்ரவரி மாதம் இறுதியில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வர இருக்கின்ற மாதங்களை பற்றிய அச்சம் மக்கள் மனதில் நிலவி வருகிறது.
இதனால் தமிழகத்திலும் பல வீடுகளில் ஏசி வைக்க தொடங்கி விட்டனர். நமது வீட்டிற்கு ஏசி வாங்கும் போது சில முக்கியமான விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டு நாம் ஏசி(AC) வாங்கும் போது அதன் முழு பயனையும் பெறலாம்
அறையின் அளவு: நம் வீடு அல்லது அறையின் அளவை கணக்கில் கொண்டு ஏசி வாங்க வேண்டும். சிறிய அளவிலான அறை மற்றும் வீடு என்றால் 1 டன் ஏசியை வாங்கலாம். பெரிய அறை என்றால் 1.5 ஏசியை வாங்கி பயன்படுத்தலாம் . அலுவலகம் போன்ற இடங்கள் என்றால் 2 த
டன் ஏசியை பயன்படுத்துவது சரியாக இருக்கும்.
நட்சத்திர மதிப்பீடு: ஏசி வாங்கும் போது அவற்றுக்கான நட்சத்திர மதிப்பீட்டை பார்த்து வாங்க வேண்டும் . பொதுவாக ஏசி 3 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் மதிப்பீடுகளில் வருகிறது.3 ஸ்டார் ஏசி பொதுவாக வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. 5 ஸ்டார் ஏசி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகிறது. 3 ஸ்டார் ஏசி 5 ஸ்டார் ஏசி விட மின்சாரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும். எனவே வீடு அல்லது கடைகள் என்றாலும் 5 ஸ்டார் ஏசியை வாங்குவதே சிறந்தது. இதன் மூலம் மின்சார கட்டணத்தை சேமிக்க இயலும் .
ஏசி வகைகள் : பொதுவாக ஏசி ஸ்பிளிட் ஏசி, விண்டோ ஏசி, டுயல் ஸ்பிளிட் , இன்வெர்டர் ஏசி என பல வகைகளில் இருக்கிறது. நமது வீட்டின் அளவு மற்றும் அதன் அமைப்பிற்கு ஏற்ப ஏசியை வாங்கலாம். பொதுவாக ஸ்பிளிட் ஏசி பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுகிறது. தற்போது நிலவும் மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக இன்வெர்ட்டர் ஏசி பெரும்பாலானவர்கள் வாங்குகிறார்கள்.
சர்வீஸ் மற்றும் பராமரிப்பு: பொதுவாக ஏசி வாங்கும் போது அதன் சர்வீஸ் மற்றும் பராமரிப்பிற்கு எளிதாக இருக்கும் கம்பெனி பிராண்டுகளை வாங்குவது சிறந்தது. இதன் மூலம் அந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டர்களில் சர்வீஸ் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம். அதேபோன்று ஏசியை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் பராமரிப்பு செய்து கொள்ள வேண்டும். இதனால் ஏசி அடிக்கடி பழுதடைவதும் தடுக்கப்படும்.
பட்ஜெட்: ஏசி வாங்குவதில் முக்கியமானது பட்ஜெட். நமது பட்ஜெட்டுக்கு சரியாக இருக்கும் ஏசியை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்ததாகும் . மேலும் நமது சொந்த உபயோகத்திற்காக வாங்குகிறோமா அல்லது அலுவலகம் உபயோகத்திற்கு வாங்குகிறோமா என்பதை நினைவில் வைத்து அதற்கு ஏற்ற பட்ஜெட்டில் ஏசி வாங்க வேண்டும். விலை சற்று அதிகமாக இருந்தாலும் நீண்ட நாட்கள் பொழுதாகாமல் இருக்கும் கம்பெனியை ஏசியை வாங்குவது சிறந்தது.