மின் கட்டணம் செலுத்திவிட்டீர்களா..? மீண்டும் வரும் மெசேஜ்..!! அதிர்ச்சியில் மக்கள்..!!
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, அனைத்து வகை மின்சார பயன்பாட்டிற்கும் 4.83% மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இந்த மின் கட்டண உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதலே அமலுக்கும் வந்துள்ளது.
அதன்படி, 0 முதல் 400 யூனிட் வரை ரூ.4.60-ஆக இருந்த கட்டணம், ரூ.4.80-ஆகவும், 401 யூனிட் முதல் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.6.15-ஆக இருந்த மின்சாரக் கட்டணம் ரூ. 6.45-ஆக நிர்ணயிக்கப்பட்டது. 501 யூனிட் முதல் 600 யூனிட் வரை ரூ.8.55-ஆகவும், 601 யூனிட் முதல் 800 யூனிட் வரை ரூ.9.65-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 801 யூனிட் முதல் 1000 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.10.20-ஆக இருந்த மின்சாரக் கட்டணம் ரூ.10.70-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1000 யூனிட்டுகளுக்கு மேல், ஒரு யூனிட் ரூ.11.25-ஆக இருந்த மின்சாரக்கட்டணம் ரூ.11.80-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், ஜூலை மாதம் மின் கட்டணம் செலுத்திய பலருக்கும் Tangedgo-வில் இருந்து இதர கட்டணம் செலுத்துமாறு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மின்வாரிய அலுவலர்கள், ஜூலை 15ஆம் தேதி 4.83% வரை மின் கட்டணத்தை உயர்த்திய தமிழ்நாடு அரசு, ஜூலை 1ஆம் தேதி முதல் இக்கட்டணம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியது. அதன்படி, ஏற்கனவே, கட்டணம் செலுத்தியோருக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் 15 வரை கணக்கிட்டு, கூடுதல் தொகைக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவதாக கூறியுள்ளனர்.
Read More : தூக்கத்தில் நடந்த துயரம்..!! உயிரை காவு வாங்கிய பிரிட்ஜ்..!! மின்சாரம் தாக்கி துடிதுடித்து பலி..!!