Business | இளைஞர்களே சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா..? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!
தமிழ்நாடு அரசின் சார்பில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
அதாவது, இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சென்னையில் 3 நாட்களுக்கு பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி மார்ச் 15ஆம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.editn.in என்ற வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
Read More : Good News | பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!! ஆட்சியர் அறிவிப்பு..!! குஷியில் மாணவர்கள்..!!