”காலி குடம் உருண்டால் சப்தம் அதிகமாகத்தான் இருக்கும்”..!! எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடிய முதலமைச்சர் முக.ஸ்டாலின்..!!
செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டு, மனிதர்களால் செய்யப்பட்ட மிகப்பெரிய செயற்கைப் பேரிடரை ஏற்படுத்தியதே அதிமுக அரசுதான் என்று ம்ுதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், ”ஃபெஞ்சால் புயல் முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக செய்திருந்தோம். நிவாரணப் பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம். மத்திய அரசின் நிதியை எதிர்பாராமல் நிவாரணப் பணிகளை செய்கிறோம்.
செம்பரம்பாக்கம் ஏரியை முன்னெச்சரிக்கை எதுவும் இன்றி திறந்துவிட்டு மேன் மேட் டிஸாஸ்டரை ஏற்படுத்தியது அதிமுக அரசுதான். அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டு 23 லட்சம் வீடுகளை மூழ்கடிக்கப்பட்டது. இதில், 200 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். புயல், வெள்ளம் எல்லாம் இயற்கை சீற்றம்தான். ஆனால், செம்பரம்பாக்கம் திறப்பு செயற்கைப் பேரிடர்.
எங்களைப் பார்த்து கத்திப் பேசும் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசைப் பார்த்து கீச்சுக் குரலில் கூட பேச முடியாத நிலையில் தான், அதிமுக உள்ளது. வயிற்றெரிச்சலில் புலம்பிக்கொண்டே இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. குற்றஞ்சாட்ட எதுவும் இல்லாததால் பொய் சொல்லக் கூடாது. சாத்தனூர் அணை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறியது இட்டுக்கட்டிய கற்பனைக் குற்றச்சாட்டு. காலி குடம் உருண்டால் சப்தம் அதிகமாகத்தான் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : பள்ளியில் பலாத்காரம்..!! கல்லூரியில் குழந்தை பெற்றெடுத்த மாணவி..!! ஆசிரியர் செய்த கேவலமான செயல்..!!