For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காட்டிற்கு நடுவே நட்சத்திர வடிவில் இராணுவ கோட்டை..!! பிரம்மாண்ட கோட்டையின் சிறப்பம்சங்கள் தெரியுமா?

Built during the reign of Tipu Sultan, Manjarabad Fort located in the Hassan district of Karnataka is regarded as one of the finest buildings of military architecture.
02:08 PM Aug 29, 2024 IST | Mari Thangam
காட்டிற்கு நடுவே நட்சத்திர வடிவில் இராணுவ கோட்டை     பிரம்மாண்ட கோட்டையின் சிறப்பம்சங்கள் தெரியுமா
Advertisement

இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன.. கோயில்களின் நாடு என்றும் இந்தியா அழைக்கப்படுகிறது.. இந்தியாவில் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டைகள் பல உள்ளன.. அந்த வகையில் காட்டிற்கு நடுவே நட்சத்திர வடிவில் அமைந்துள்ள மஞ்சராபாத் கோட்டையை பற்றி தற்போது பார்க்கலாம்.

Advertisement

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் அமைந்துள்ள திப்பு சுல்தானின் காலத்தில் கட்டப்பட்ட மஞ்சராபாத் கோட்டை ராணுவ கட்டிடக்கலையின் மிகச்சிறந்த கட்டிடங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. நாட்டில் உள்ள முக்கிய ராணுவ கோட்டைகளில் ஒன்றாக கருதப்படும் இது 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தக் கோட்டையை, பிரெஞ்சு கட்டிடக்கலைஞரான செபாஸ்டின் லு ப்ரெஸ்ட்ரே என்பவர் வடிவமைத்துள்ளார். திப்பு சுல்தானுக்கும் பிரிட்டிஷ் ராணுவத்துக்கும் இடையே நடந்த போரின் விளைவாக இந்தக் கோட்டை உருவாக்கப்பட்டது. போரின் விளைவாக கோட்டை அழிக்கத்தானே படும். எப்படி உருவானது என்று தானே யோசிக்கிறீர்கள்.

இந்தியாவில் வணிகம் செய்த ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆகாது. ஆங்கிலேயரை உள்நாட்டு மன்னர் யாராவது வீழ்த்த முடிவெடுத்தால், சாதாரணமாகவே பிரெஞ்சுகாரர்கள் முன்வந்து அவர்களுக்கு உதவி செய்வர். போதாக்குறைக்கு அப்போது திப்புவுக்கு பிரெஞ்சுக்காரர்கள்  நண்பர்களாக இருந்தனர். அதனால், திப்பு சுல்தானுக்கு உதவிய பிரெஞ்சுக்காரர்களுடனான அவரது நல்லுறவின் காரணமாக, எளிதில் உடைக்க முடியாத ஒரு தனித்துவமான கோட்டையைக் திப்புவுக்கு கட்டிக் கொடுத்துள்ளனர். இந்த கோட்டை 1792 இல் கட்டி முடிக்கப்பட்டது. அப்போதிருந்து, இந்த கோட்டை திடமாக நிற்கிறது.

இது ஒரு நட்சத்திர வடிவ கோட்டையாகும். இந்த கோட்டையின் 8 கடினமான அம்பு போன்ற அமைப்புச் சுவர்களைக் கொண்டுள்ளது. கோட்டையின் நட்சத்திர வடிவ முனை பகுதிகள் காவல் காக்கும் வில்வித்தை வீரர்களுக்கு சாதகமானதாக இருந்துள்ளது. அதோடு மஞ்சராபாத் கோட்டை ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள கோட்டையுடன் நிலத்தடி சுரங்கப்பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கோட்டையின் அழகை பாதுகாக்கவும், கோட்டையை சுற்றிலும் மரங்கள் மற்றும் தோட்டங்களை நட்டு சரியான சுற்றுலா தலமாக மாற்றவும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோட்டை பெரிதாக சேதம் ஆகாமல் இன்றும் அப்படியே இருக்கிறது. இங்கு போர் பயிற்சிக்கூடம், ஆயுதக்கிடங்கு, வெடிமருந்து சேமிப்பகம் எல்லாம் அப்படியே இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் கோட்டைக்கு நடுவே நான்கு புறமும் இருந்து இறங்கும் ஒரு நீர் தேக்கமும் உள்ளது. இந்த கோடை விடுமுறை சீசனில் இந்த கோட்டைக்கு சென்று வரலாம் அல்லவா? நம் குழந்தைகளுக்கு திப்பு, ஹைதரின் வரலாறுகளை சொல்லிக்கொடுக்கவும் இது ஏதுவாக இருக்கும்.

Read more ; சிறையில் சொகுசு வசதி..!! வேறு சிறைக்கு மாற்றப்பட்ட பிரபல நடிகர் தர்ஷன்..!!

Tags :
Advertisement