முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரஷ்யா உயர் கட்டிடம் மீது உக்ரைன் டிரோன் அட்டாக்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!!

Buildings Hit by 9/11-Style Drone Attack In Russia
06:30 PM Dec 21, 2024 IST | Mari Thangam
Advertisement

அமெரிக்காவில் 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டை கோபுர தாக்குதல் போல் ரஷ்யாவின் காஸன் நகர் அடுக்குமாடி குடியிருப்பு மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

Advertisement

நேட்டோ என்ற கூட்டமைப்பில் சேருவதற்கு உக்ரைன் முயற்சி செய்தது. இதனை விரும்பாத ரஷ்யா, உக்ரைனை எச்சரித்தது. எனினும் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன், நேட்டோவில் சேர தயாரானது. இதனால் ஆத்திரம் அடைந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது தனது ராணுவத்தை ஏவினார். இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு தொடங்கிய போர் இன்று வரை நீடித்து வருகிறது. இந்த போரில் இந்திய மாணவர்கள் உள்பட ஏராளமானவர்கள் கொல்லப்பட்டுவிட்டனா். 

2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவரும் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடந்துவரும் நிலையில் இரு நாடுகளும் சமீப காலமாக டிரோன் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக உக்ரைனுக்கு அமெரிக்கா 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதம் தாங்கிய அதிநவீன டிரோன்களை வழங்கி உள்ளது. இந்த ஆயுதங்களை உக்ரைன் முழு வீச்சில் பயன்படுத்த தொடங்கி உள்ளது. ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியா போன்ற அமைதி விரும்பிகள் முயன்று வருகின்றன. எனினும் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன.

இந்த நிலையில் ரஷ்யாவின் காசான் நகரில் உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  குடியிருப்பு கட்டடத்தை உக்ரைன் டிரோன் தாக்கி அழித்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் 6 கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. குறிப்பாக டிரோன் ஒன்று மோதியதில் காசான் நகரில் இருந்த மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் சேதமடைந்தது.

தாக்குதலை தொடர்ந்து கட்டிடத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனா்.  9/11 ஸ்டைலில் உக்ரைன் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷ்யா மீது உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி உள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி டிரோன் தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Read more ; சரியான தீர்ப்பு!!! மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு, கோர்ட் வழங்கிய தண்டனை..

Tags :
Drone Attack In RussiaRussiaukraine
Advertisement
Next Article