For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BUDGET BREAKING | நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல் ரகங்கள்..!! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!!

10:32 AM Feb 20, 2024 IST | 1newsnationuser6
budget breaking   நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல் ரகங்கள்     அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

Advertisement

பட்ஜெட் தாக்கல் செய்து அவர் பேசுகையில், தமிழ் சமூகம் உழவர்களை உச்சத்தில் வைத்துள்ளது. உழவர்கள் வாழ்வு வளம்பெற வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர் வாழ்க்கையை மேலும் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும். உழவர் பெருமக்களின் நலனுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து வருகிறார். 2 ஆண்டுகள் 1.5 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மானிய விலையில் வேளாண் கருவியில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன” என்றார்.

2022-23ஆம் ஆண்டில் 116 மெட்ரிக் டன்னாக உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது. நுண்ணீர்ப் பாசனம், வேளாண் இயந்திரங்களுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும என்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :

* 2 லட்சம் விவசாயிகள் பயனடைய, 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் தயாரிக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* முதலமைச்சரின் மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு ரூ.206 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நிரந்தர மண்புழு உரத் தொட்டிகள், உரப்படுக்கை அமைக்க ரூ.5 கோடி மானியம் வழங்கப்படும்.

* 2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு.

* வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் ஒதுக்கீடு.

* ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து மண் வளம் காக்க ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பயிர் உற்பத்தித்திறன் உயர்த்துதல் ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஆடாதொடா நொச்சி போன்ற உயிரி பூச்சிக்கொல்லி தாவரங்கள் வளர்த்திட 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* 'வேளாண் காடுகள் திட்டம்' மூலம் பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த 10 இலட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசமாக வழங்கிட ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு.

* தலா 37 ஆயிரம் ஏக்கர் களர், அமில நிலங்களைச் சீர்ப்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு.

* பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு.

* நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சீவன் சம்பா பாரம்பரிய நெல் இரகங்கள் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்ய விதை விநியோகம் செய்யப்படும்.

Advertisement