For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BREAKING | ”அண்ணனின் பிறந்தநாளன்றே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம்”..!! கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்..!!

Punnai Pala, younger brother of Arcot Suresh, who surrendered in the Armstrong murder case, has given a sensational confession.
10:29 AM Jul 06, 2024 IST | Chella
breaking   ”அண்ணனின் பிறந்தநாளன்றே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தோம்”     கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
Advertisement

சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்தவர் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர், நேற்றிரவு அவரது வீட்டருகே ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி செய்யும் நபர்கள் போல வந்த மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் அவரை சூழ்ந்து வெட்டி சாய்த்தது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே நிலைகுலைந்து விழுந்தார்.

Advertisement

இந்நிலையில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆம்ஸ்ட்ரங்கை அவரது ஆதரவாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சென்னை மாநகர போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த கொலை வழக்கில் சரணடைந்த ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தனது அண்ணன் ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகவும், அவரது ஆதரவாளர்கள் தன்னை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்யப்பட்டர். இதற்கு பழி தீர்க்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்ததாக பாலா தெரிவித்துள்ளார். இப்படியாக பழிக்குப் பழி கொலை சம்பவங்களால் தலைநகர் சென்னை மீண்டும் கிரைம் நகரமாக மாறி இருப்பதாக அச்சம் தெரிவிக்கின்றனர் சென்னை வாசிகள்.

Read More : ”சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்”..!! ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்..!!

Tags :
Advertisement