For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BREAKING | விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்..!! திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு..!!

Aniyur Siva has been announced as the DMK candidate in the Vikravandi by-election.
01:51 PM Jun 11, 2024 IST | Chella
breaking   விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்     திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
Advertisement

விக்கிரவண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி, கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து, மக்களவை தேர்தலுடன் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடைபெறவில்லை.

இதற்கிடையே விக்கிரவண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இடைத்தேர்தலுக்கான தேதியைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, ஜூலை 10ஆம் தேதி தேர்தலும், ஜூலை 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விக்கிரவண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் விழுப்புரம் மாவட்ட விவசாய அணி செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : அமைச்சர் செஞ்சி மஸ்தான் முக்கிய பொறுப்பில் இருந்து விடுவிடுப்பு..!! திமுக தலைமை அறிவிப்பு..!!

Tags :
Advertisement