BREAKING | டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! இந்த மாவட்டங்களிலும் சம்பவம் இருக்கு..!!
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை முதல் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் நாளை தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை முதல் இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அக்டோபர் 17ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்.18, 19ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Read More : தீவிரமடையும் பருவமழை..!! பால், கால்நடை தீவனம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆவின்..!!