முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

BREAKING| விடிய விடிய சிறை!. விடுதலை ஆனார் நடிகர் அல்லு அர்ஜுன்!

Actor Allu Arjun has been released from Vidya Jail after being arrested in the case of the death of a fan.
07:00 AM Dec 14, 2024 IST | Kokila
Advertisement

Allu Arjun released: ரசிகர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விடிய விடிய சிறையில் இருந்து நடிகர் அல்லு அர்ஜுன் விடுதலையாகி வெளியே வந்துள்ளார்.

Advertisement

சுகுமார் இயக்கி நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆறு நாட்களில் இப்படம் ரூ.1,000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதற்கிடையே, கடந்த டிசம்பர் 4ஆம் தேதி, ஐதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் உள்ள சந்தியா திரையரங்கில் இரவு 9.30 மணிக்கு புஷ்பா-2 பிரீமியர் காட்சியைக் காண குடும்பத்துடன் சென்ற 35 வயதான ரேவதி என்ற பெண் கூட்டத்தில் சிக்கி மயங்கி விழுந்தார். உடனே, அப்பெண்ணை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக, நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரேவதியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வழங்குதாக அல்லு அர்ஜுன் தெரிவித்திருந்தார். ரேவதி உயிரிழந்த விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தெலுங்கானா ஐகோர்ட்டில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜூனை தெலுங்கானா போலீசார் நேற்று கைது செய்தனர். சிக்கட்பள்ளி காவல்நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அல்லு அர்ஜுன், பின்னர் நம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் சிறைக்காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுன் தெலுங்கானா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இதன் மூலம் நம்பள்ளி கோர்ட்டு பிறப்பித்த 14 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள நடிகர் அல்லு அர்ஜுன் சில மணி நேரத்தில் சஞ்சல்குடா சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஆவணங்கள் சிறைக்கு வர தாமதம் ஆனதால் வர இரவு முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரவு 10 மணி வரை சிறை வரவேற்பறையில் இருந்த அல்லு அர்ஜுன், அதற்கு மேல் முதல் வகுப்பிற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் ஆவணங்கள் அனைத்தும் சிறைக்காவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டு இன்று காலை 6 மணிக்கு சஞ்சல்குடா சிறையில் இருந்து அல்லு அர்ஜுன் வெளியே வந்துள்ளார்.

Readmore: ஈரான் மீது போரா?. எந்த சூழ்நிலையிலும் எதுவும் நடக்கலாம்!. டிரம்ப் அதிரடி!.

Tags :
allu arjuncourtReleased
Advertisement
Next Article