சிறையில் இருந்து வந்த அல்லு அர்ஜுனை கண்ணீருடன் கட்டிப்பிடித்த மனைவி... எமோஷனல் வீடியோ...
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. மேலும் குறுகிய காலத்திலேயே 1000 கோடி வசூல் செய்த படமாகவும் இந்த படம் மாறி உள்ளது. முன்னதாக கடந்த 4-ம் தேதி சிறப்பு காட்சியை பார்க்க அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கிற்கு சென்றார்.
அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 35 வயதான ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த அல்லு அர்ஜுன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளிப்பதாகவும் அறிவித்திருந்தார்..
இதனிடையே உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தொடர்ந்த நேற்று அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். கீழமை நீதிமன்றம் அவருக்கு நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டது. ஆனால் அல்லு அர்ஜுன் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில் அவருக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்தது.
ஒரு நடிகராக இருந்தாலும் அர்ஜுனுக்கு குடிமகனாக வாழ்வதற்கும் சுதந்திரத்திற்கும் உரிமை உள்ளது என்று கூறிய நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். நேற்றிரவு முழுவதும் சிறையில் கழித்த நிலையில் இன்று காலை அல்லு அர்ஜுன் விடுதலையானார்.
இதையடுத்து இன்று காலை வீடு திரும்பிய அவருக்கு, அவரின் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அல்லு அர்ஜுனின் மனைவி சினேகா ரெட்டி கண்ணீருடன் அவரை கட்டி அணைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் சினேகா அல்லு அர்ஜுனை கண்ணீருடன் கட்டிப்பிடிப்பதை பார்க்க முடிகிறது. அதே போல் அவரின் குழந்தைகளான அயன் (10), அர்ஹா (8) ஆகியோரும் தங்கள் தந்தைக்கு அன்பான வரவேற்பு அளித்தனர். அந்த வீடியோவில், அல்லு அர்ஜுன் அர்ஹாவை தனது தூக்கி கன்னத்தில் முத்தமிடுவதையும் பார்க்க முடிகிறது.
மேலும் தனது தம்பியும் நடிகருமான அல்லு சிரிஷையும் பாசத்துடன் கட்டி அணைத்தார்.
முன்னதாக ஊடகங்களிடம் பேசிய அல்லு அர்ஜுன் தனது ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், “கவலைப்பட ஒன்றுமில்லை. நான் நன்றாக இருக்கிறேன். நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். காவல்துறையினருக்கு ஒத்துழைப்பேன். இது எனக்கும் எனது அன்புக்குரியவர்களுக்கும் சவாலான நேரம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “கடந்த 20 ஆண்டுகளாக, பல திரைப்படங்களைப் பார்க்க தியேட்டர்களுக்குச் செல்கிறேன். இது எப்போதுமே மகிழ்ச்சியான அனுபவமாக இருந்து வருகிறது, ஆனால் இந்த முறை, எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது,” என்று தெரிவித்தார்.
மேலும் “ குடும்பத்தாருக்கு மீண்டும் ஒருமுறை எனது இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறேன். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். நடந்ததற்கு வருந்துகிறோம்,” என்று கூறினார்.
இன்று காலை அவர் விடுதலையானதை தொடர்ந்து, வீட்டிற்குச் செல்வதற்கு முன், அல்லு அர்ஜுன் தனது தந்தை அல்லு அரவிந்துடன் தனது குடும்பத்தின் தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் அலுவலகத்திற்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : ” இது ஒரு சவாலான சூழ்நிலை.. ஆனா…” சிறையில் இருந்து விடுதலையான பின் முதன்முறையாக பேசிய அல்லு அர்ஜுன்..