முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

#BREAKING | பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை..!! ரூ.50 லட்சம் அபராதம்..!! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!

10:47 AM Dec 21, 2023 IST | 1newsnationuser6
Advertisement

1996-2001ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார் பொன்முடி. அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடிக்கு பொன்முடி சொத்து குவித்தார் என 2011இல் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் பொன்முடி மனைவி விசாலாட்சியும் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் பொன்முடி உள்ளிட்டோரை ஜூன் மாதம் விடுதலை செய்தது.

Advertisement

ஆனால் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். பின்னர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டார். இதனால் நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார். இந்த வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளிக்கையில், வருமானத்துக்கு அதிகமாக 64.09% பொன்முடி சொத்து குவித்திருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த வழக்கில் பொன்முடி குற்றவாளி. பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோருக்கான தண்டனை விவரங்கள் டிசம்பர் 21 (இன்று) அறிவிக்கப்படும். இதனால், இருவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நேரில் ஆஜராகினர். இந்நிலையில், நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வயதையும், மருத்துவக் காரணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என வாதிட்டார். மேலும், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரின் மருத்துவ அறிக்கையையும் வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Tags :
சென்னை உயர்நீதிமன்றம்தண்டனைதிமுக ஆட்சிதீர்ப்புபொன்முடிலஞ்ச ஒழிப்புத்துறைவிசாரணை
Advertisement
Next Article