BREAKING | ”பயங்கர ஆக்ரோஷமா இருக்கும்”..!! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சூறாவளி எச்சரிக்கை..!!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (நவ.30) சூறாவளி வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் தற்போது ஃபெங்கல் புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் பிற்பகல் 2.30 மணியளவில் உருவானதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் ஆனது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை பிற்பகலில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (நவ.30) சூறாவளி வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். அதேபோல் கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பலத்த தரைக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.