BREAKING | இன்னும் சற்று நேரத்தில்..!! துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்..? அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..?
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா பயணம் மேற்கொள்ளும் முன் துணை முதல்வர் பதவி பற்றி அறிவிக்காத முதல்வர் முக.ஸ்டாலின் திரும்பி வந்ததும் இந்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடைப்பட்ட நேரத்தில் அப்படி என்ன மாற்றம் நடந்தது. உதயநிதிக்கு இப்போது துணை முதல்வர் பதவி தர ஸ்டாலின் நினைப்பது ஏன் என்பதற்கு சில காரணங்கள் உள்ளன.
ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிராக கடுமையான சட்ட வழக்குகள் நடைபெற்றன. இதையெல்லாம் சமாளித்தே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த நிகழ்ச்சியை நடத்தி காட்டி உள்ளார். அடுத்ததாக சென்னையில் ஒரு பெரிய போட்டி நடக்கிறது. இதனால் முதலீடுகள் வரும், உலக அளவில் சென்னை கவனிக்கப்படும் என்பதை பற்றி பேசாமல், சிலர் சென்னையில் நடக்கும் இந்த போட்டிகளை கிண்டல் செய்தனர். இது போக எதிர்க்கட்சிகள் இந்த போட்டிக்கு எதிராக கடுமையாக காய்களை நகர்த்தி வந்தன.
குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின் இந்த திட்டத்தை முன்னின்று நடத்துவதால், இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இதற்கு இடையில்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார். முதல்வர் முக.ஸ்டாலின் இல்லாத நேரத்தில் இந்த போட்டியை வெற்றிகரமாக நடத்தியதோடு அமைச்சர்களுடன் ஆலோசனை, பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தது போன்ற செயல்கள் காரணமாக இம்ப்ரஸ் ஆன ஸ்டாலின், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியை கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.
இந்நிலையில் தான், தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு இன்று காலை 11.30 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.