BREAKING | அண்ணா யுனிவர்சிட்டி மாணவி கூட்டு பலாத்காரம்..!! ஒருவர் அதிரடி கைது..!!
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, அங்கு அடையாளம் தெரியாத இருவர் மாணவனை தாக்கி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. காதலன் கொடுத்த புகாரின் பேரில் விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர், பல்கலைக்கழகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் தற்போது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Read More : இதை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி பறந்து போய்விடும்..!! அதுவும் இப்படி சாப்பிட்டு பாருங்க..!!