BREAKING | அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் எதிரொலி..!! நாளை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு..!!
அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து நாளை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 61 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்தச் சூழலில், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மாநில அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை பேரவையில் விவாதிக்க வலியுறுத்தி அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நேற்று ஒருநாள் மட்டும் அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்றும் சபாநாயகரின் இருக்கை சுற்றி நின்று மீண்டும் பேரவையில் அமளி செய்ததால் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து நாளை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. நாளை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : BIG BREAKING | கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்..!! சபாநாயகர் அதிரடி உத்தரவு..!!