BREAKING | ஏப்ரல் 19ஆம் தேதி நீதிமன்றங்களுக்கும் விடுமுறை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளை உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி, பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளை உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில வழக்குகளின் விசாரணை முன்கூட்டியே நடத்தப்படும். சில வழக்குகள் தேர்தலுக்குப் பின் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. குறிப்பாக கோடநாடு வழக்கு ஏப்ரல் 22, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஏப்ரல் 25ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.