ரத்த சர்க்கரை அளவு..!! காலை உணவு ரொம்ப முக்கியம்..!! அதுவும் இப்படி சாப்பிடுங்க..!!
கோடை காலத்தில் டயாபட்டீஸ் நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை கவனமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, காலை சாப்பாட்டிற்கு பிறகு சர்க்கரை அளவு ஏறியுள்ளதா அல்லது இறங்கியுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது தலை பாரமாக இருக்கும் அல்லது எதையும் தெளிவாக யோசிக்க முடியாமல் போகலாம். உங்கள் உடலின் சக்தியும் குறைவாக இருக்கும். பதட்டமாக உணர்வீர்கள். இதுவே சர்க்கரை அளவு மிகவும் குறைந்தால் மயக்கம் ஏற்படும். நீண்டகால நோக்கில் இது இதய நோய்களையும் பக்கவாதம், சிறுநீரக நோய்கள் வரும் ஆபத்தையும் அதிகரிக்கும்.
ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதில் காலை உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. உணவிற்குப் பின் நாம் பின்பற்றக்கூடிய சில பழக்கங்கள் மூலம் நம்முடைய சர்க்கரை அளவு ஏறவோ அல்லது குறையவோ செய்யும். கோடை காலத்தில் காலை உணவுக்குப் பின் இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றினால் உங்கள் ரத்த சர்க்கரை அளவை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.
நீர்ச்சத்து முக்கியம்: கோடையில் உடலில் நீரிழப்பு ஏற்பட்டு ரத்த சர்க்கரை அளவை பாதிக்கும். ஆகையால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குறைவான கலோரிகள் கொண்ட மூலிகை டீ பருகுங்கள். சர்க்கரை சேர்க்காத டீடாக்ஸ் வாட்டர் எடுத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் உடலில் நீர்ச்சத்தை குறையவிடாமல் பார்த்துக்கொள்ளும்.
குறைவான க்ளைசைமிக் குறியீடு உள்ள உணவுகள்: உடலில் உடனடியாக ரத்த சர்க்கரை அளவு உயர்வதை தடுக்க வேண்டும் என்றால், குறைவான க்ளைசைமிக் குறியீடு உள்ள உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். முழு தானியம், மாவுச்சத்து இல்லாத உணவுகள், லீன் புரொட்டீன் ஆகியவற்றை காலை உணவுக்குப் பிந்தைய சாப்பாடாக எடுத்துக்கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி முக்கியம்: நீண்ட பகல் நேரத்தை சாதகமாக எடுத்துக்கொண்டு, வெயில் அதிகம் இல்லாத காலை உணவிற்கு பிந்தைய நேரத்தில் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். அது நடைபயிற்சியாகவோ, ஜாக்கிங் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். இந்தப் பயிற்சிகள் உங்களை சுறுசுறுப்பாக இருக்க செய்வதோடு கோடைகாலத்தில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவும்.
அளவாக சாப்பிடுங்கள்: அதிக கார்போஹைடரேட் நிறைந்த காலை உணவுக்கு பதிலாக புரோட்டீன், ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் சிறிதளவு கார்போஹைடரேட் ஆகியவை கலந்த சரிவிகித உணவை சாப்பிட வேண்டும். இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதோடு சக்தியை உடலுக்கு தருகிறது.
சர்க்கரை அளவை கண்காணிக்கவும்: நாள் முழுவதும், அதுவும் குறிப்பாக சாப்பாட்டிற்குப் பின் உங்கள் ரத்த சர்க்கரை அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அடிக்கடி பரிசோதனை செய்வதால் அதற்கேற்ற வகையில் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள உதவியாக இருக்கும். கோடை காலத்தில் டயாபட்டீஸை பராமரிப்பதற்கான டயட் திட்டத்தை வகுக்க இதுவொரு ஆரோக்கியமான வழியாகும்.
Read More : ஜூன் 28ஆம் தேதி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விஜய்..!! த.வெ.க. சார்பில் ஏற்பாடுகள் தீவிரம்..!!