மூளையை உண்ணும் அமீபா நோய்..!! 5 வயது சிறுமி திடீர் மரணம்..!! கேரளாவில் அதிர்ச்சி..!!
கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்றால் 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மூனியூர் பகுதியில் வசித்து வந்த 5 வயது சிறுமி மே 1ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள குளத்தில் குளித்துள்ளார். மே 10ஆம் தேதி முதல் சிறுமிக்கு காய்ச்சல், தலைவலி, வாந்தி ஏற்பட்டு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே அந்த சிறுமி மே 20ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, சிறுமியின் மரணம் குறித்து மருத்துவர்கள் விசாரணை நடத்தினர். இதில் சிறுமிக்கு அமீபிக் என்செபாலிடிஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வெளிப்பாட்டால் 97% இறப்பு வாய்ப்பு உள்ளது. இது பொதுவாக 'மூளையை உண்ணும் அமீபா' என்று அழைக்கப்படுகிறது. குழந்தையின் மூளையில் 'நேக்லேரியா ஃபௌலேரி' அமீபா இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அசுத்தமான நீரில் காணப்படும் இந்த வகை அமீபா ஒட்டுண்ணி அல்லாதது.
இவை மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையை அடைந்து திசுக்களை அழிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இறந்த சிறுமியுடன் குளத்தில் குளித்த மற்ற குழந்தைகளும் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு தொற்று இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த 2017 மற்றும் 2023ஆம் ஆண்டு ஆலப்புழா மாவட்டத்தில் இந்த வகை தொற்று நோயால் சிலர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read More : மாணவர்களே..!! பள்ளிகள் திறந்தவுடன் வரப்போகும் அதிரடி மாற்றம்..!! இனி இதற்கெல்லாம் தடை..!!